இன்று காரைதீவில சர்வதேச வெள்ளைப்பிரம்புதின நிகழ்வு


காரைதீவு நிருபர் சகா-
ர்வதேச வெள்ளைப்பிரம்புதினத்தையொட்டி காரைதீவு பிரதேச சபை இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை சர்வதேசவெள்ளைப்பிரம்புதின நிகழ்வை காரைதீவில் நடாத்தவுள்ளது.
முன்னதாக பிரதேசசபை முன்றலிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் பிரதானவீதி மற்றும் திருமால்முகவீதியூடாக விபுலாநந்த கலாசார மண்டபத்தை வந்தடையும்.
பின்னர் மண்டபத்தில் பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமஅதிதியாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
கௌரவஅதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவிஉள்ளுராட்சி ஆணையாளர் எ.ரி.எம்.றாபி நிந்தவூப்பிரதேசசபைத்விசாளர் எம்.எ.எம்.தாஹிர் சம்மாந்துறைப்பிரதேசசைபத்தவிசாளர் எ.எம்.எம். நௌசாட் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் மட்டு.மாவட்ட சமுகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி சம்மாந்துறை பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி இப்னுஅசார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நட்சத்திரஅதிதிகளாக ஜனாதிபதி விருதுஊடகசான்றிதழ் பெற்ற சிரேஸ்ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா இளம்சாதனையாளர் சோ.வினோஜ்குமார் ஆகியோரும் மேலும் பல விசேடஅதிதிகள் ஆன்மீகஅதிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் மட்டு.வழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் 75பேர் கலந்தகொண்டு கலைநிகழ்ச்சிகளை அளிக்கவுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -