இது மக்களை திசைதிருப்ப எடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடாகவே நான் பார்க்கிறேன் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொத்துவில் மக்களும் அக்கரைப்பற்று மக்களும் - ஹக்கீம் காங்கிரஸை முற்றாக ஒதுக்கி , தூக்கி எறிந்து விட்டார்கள். இந்த நிலையில் முஷாரபும் அதாவுல்லாவும் ஹக்கீம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைப்பீர்களேயானால் அது உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் சூனியமாகும். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் இருவரையும் உங்கள் சொந்த ஊர் மக்களே ஒதுக்கித் தள்ளுவார்கள்.
ஹக்கீம் காங்கிரஸ் - பாரிய வாக்குச் சரிவை கண்டிருக்கும் நிலையில் எவ்வாறு முதலமைச்சரை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் திட்டமிட்ட பொய் கதையாடல்கள்.
மக்கள் - சகல உண்மைகளையும் அறிந்து வைத்துள்ளார்கள். ஹக்கீம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்ப அவர்கள் தயாரில்லை என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment