கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு



பாறுக் ஷிஹான்-
பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உணவகங்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக கல்முனை பொதுச் சந்தை பகுதிகளில் நேற்று (22) திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் தலையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த உருளைக்கிழங்கு உட்பட உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருத்த வழிமுறைகளுக்கு அமைவாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :