இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை



ந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

காணிப்பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேற்படி பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறுகின்றது. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இக்கூட்டத்தின் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :