மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை நினைவாலயத்தை கலாசார தலமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்- 
க்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை வாழ்ந்த வீட்டினை நுவரெலியா மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாசார தலங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்படும் என நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் அமில நவரத்ன தெரிவித்துள்ளார். 
சர்வதேச புகழ்பெற்ற பிரபல இலக்கியவாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமர்ர் சிவி வேலுப்பிள்ளை யின் 105 வது பிறந்த தின நிகழ்வுகள் நேற்று அவரது பிறந்த ஊரான வட்டகொடை மடகொம்பரையில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய முன்னணியின் நுவரெலியா செயலாளர் நாயகமும் நுவரலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே மாவட்ட மேலதிக செயலாளர் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

நுவரலியா மாவட்டத்தில் இருந்து நாடுபோற்றும் இலக்கியவாதியாக தொழிற்சங்கவாதியாக பாராளுமன்ற உறுப்பினராக வாழ்ந்து மறைந்த சிவி வேலுப்பிள்ளை பற்றி இதற்கு முன்னர் கேள்விபட்டிருந்தபோதும் அவர் பிறந்து வாழ்ந்த ஊரான மடகொம்பரை மண்ணுக்கு வந்து பார்க்கின்ற போது கிடைக்கின்ற உணர்வு வேறானது. அந்த உணர்வினை அஅனைவரும் அனுபவிக்கும் வகையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் கீழ் சி வி நினைவாலயத்தைப் பொறுப்பேற்று நுவரலியா மாவட்டத்தின் வரலாற்று புகழ் மிக்க கலாசார தலமாக பிரகடனப்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தரும் தளமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் "மலையக மக்கள் : ஒரு புறநிலைப்பார்வை " எனும் தலைப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யின் தவிசாளர் சிராஜ் மஷ்ஷூர் நினைவுப்பேருரை ஆற்றியதுடன் பிரபல இலக்கியவாதிகளான தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், கலாநிதி ந. ரவீந்திரன் ஆகியோர் சிவி நினைவுரைகளையும் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -