மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல சாய்ந்தமருது பள்ளிவாசல் வாய்திறக்க வேண்டும்!


சாய்ந்தமருது  அல்-ஜலால் பாடசாலை கட்டிட விவகாரமாக கடந்தவாரம் முழுவதுமாக பாடசாலைப் பகிஷ்கரிப்பு என்ற நிலையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாது இருந்தனர்.
இதன் விளைவாக குறித்த விவகாரம் ஒரு சாதகமாக நிலையை அடையக்கூடிய வாய்ப்பிருப்பதாக அறியக்கிடைக்கிறது.

அதே நேரத்தில், தனது கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு சாய்ந்தமருதிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படுமா என பெற்றோர்கள் பெரும் அங்கலாய்ப்பில் இருக்கின்றனர்.
எனவே, இது விவகாரமாக இராஜதந்திர நகர்வுகளை செய்வதோடு, நாளை முதல் பாடசாலகளை திறப்பதற்குரிய அறிவிப்பை செய்வதற்கு சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்வர வேண்டும் எனவும் மக்கள் தங்களது ஆதங்கப்படுகின்றனர்.

இன்னும் குறுகிய காலத்துக்குள் கல்விப்பொது தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறவுள்ளதை கவனத்தில் எடுத்து பிரதேசத்தின் கல்வியூடான முன்னேற்றமே உண்மையான அபிவிருத்தி என்பதை கவனத்தில் கொண்டும் பள்ளிவாசல் தனது மௌனத்தை கலைத்து செயற்படவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -