கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கொழும்பு வர்த்தக சங்க தலைவர் டாக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, வி இராதாகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -