சாய்ந்தமருதில் அல்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு – 2026



2026 ஜூன் 06 ஆம் திகதி (சனிக்கிழமை) சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில், அல்குர்ஆன் மதரஸா ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கும் மாலையில் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா நிர்வாகிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் காரியாலயத்திலும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். மீராஸாஹிப் சலீம் (சர்கி). தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுகளுக்கான அனுசரணையை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் வைத்துஸ்சக்காத் நிறுவனத்தின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் வழங்கியிருந்தார்.

அல்குர்ஆன் மத்ரஸா கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, மத்ரஸா ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் மற்றும் கல்வி தரநிலைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது.

நிகழ்வில் பிரதான வளவாளர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் குர்ஆன் மதரஸா விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ் ஷெய்க் ஏ.சி.எம். பாஸில் (ஹுமைதி), குர்ஆன் மதரஸா விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் அஃலம் (நூராணி), ஊடக இணைப்பாளர் அஷ் ஷெய்க் பசால் (ஹுமைதி), மற்றும் கொழும்பு மாவட்ட பயிற்றுவிப்பாளர் அஷ் ஷெய்க் அஸ்வர் அலி (தபிலிகி) ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டல் உரைகளை வழங்கினர்.

நிகழ்வை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளையின் செயலாளர் எம்.எச்.எம். நப்றாஸ் (ரஹ்மானி) நெறிப்படுத்தினார்.

இக்கருத்தரங்கில் மதரஸா ஆசிரியர்களின் கல்வி முறைகள், மாணவர் வளர்ச்சி அணுகுமுறைகள், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமகால கல்வி சவால்களை எதிர்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, அல்குர்ஆன் கல்வி துறையில் தரநிலையை உயர்த்தும் நோக்குடன் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான மற்றும் கல்வி ரீதியான வழிகாட்டுதலை வழங்கிய முக்கியமான முயற்சியாக அமைந்தது.






















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :