பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி வைத்தியசாலைக்கு பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டது.



எம்.ரீ. ஹைதர் அலி-காத்தான்குடி தள வைத்தியசாலை A தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டும் அதனுடைய ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் போதியளவு நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது தொடர்ச்சியான ஒரு பிரச்சினையாக இருந்துவருகின்றது.

மிக அதிகமான நோயாளிகளை பராமரிப்பு செய்யும் காத்தான்குடி தள வைத்தசாலையில் போதிய வசதியின்மை காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காக சேவைக்கு உகந்த நிலையில் ஒரேயொரு அம்பியூலன்ஸ் வண்டி மாத்திரமே உள்ள நிலையில் நோயாளிகளை உரிய நேரத்திற்கு ஏனைய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதில் பாரிய பிரச்சினையை வைத்தியசாலை நிர்வாகம் முகம்கொடுத்து வருகின்றது.
அவ்வாறே சத்திர சிகிச்சை செய்யப்படும் மற்றும் நடக்க முடியாதளவிலான நோயாளிகளை முதலாம் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டு செல்வதிலும் பாரிய அசௌகரியங்கள நோயாளிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் வைத்தியசாலையின் மிகப்பிரதான தேவையாக காணப்படும் நோயாளிகளை முதலாம் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டு செல்வதற்கான மின் உயர்த்தி (Elevator) மற்றும் அம்பியூலன்ஸ் வண்டி என்பன முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமிடம் தொடரேற்சியாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மின் உயர்த்திக்கு தேவையான ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன் தொடரில் நேற்று 09.08.2019 சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமும் கலந்துகொண்டு சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டிக்கான ஆவணங்கள் மற்றும் திறப்பு என்பனவற்றை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசால வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஜாபிரிடமும் கையளித்தனர்.
இதன்போது ஷிப்லி பாறூக் அமைச்சரை அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்து காத்தான்குடி தள வைத்தியசாலை A தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளபோதிலும் அதனுடைய ஆளணிப் பற்றாக்குறை மற்றும் ஏனைய பௌதிக வளங்கள் தேவைப்பாடுகள் இன்னும் A தர வைத்தியசாலைக்கு ஏற்றாற்போல் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இது சம்பந்தமாக மிக விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஷிப்லி பாறூக்கிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கௌரவ அதிதியாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய வைத்தியசாலை பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -