நிந்தவூரில் பெட்மின்டன் உள்ளக அரங்கு ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்படுத்தப்படுவதாக பிரதேச இளைஞர்கள் கவலையடைகின்றனர்.


நிந்தவூர் பிரதேச இளைஞர்கள் கடந்த காலங்களில் சம்மாந்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு நீண்ட தூரங்கள் சென்று பெட்மின்டன் விளையாட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனை கவனத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசல் காசிம் மேற்கொண்ட முயற்சியினால் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் பெட்மின்டன் உள்ளக அரங்கினை நிர்மாணித்து இளைஞர்கள் விளையாடுத்திறனை ஊக்கவிக்கும் நோக்குடன் கையளிக்கப்பட்டது.
பெட்மின்டன் உள்ளக அரங்கு பிரதேச சபையினால் பாராமரிக்க வேண்டியிருந்தும் இதனை செய்வதற்கு நிந்தவூர் பிரதேச சபை அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றது. ஏனைய பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் குறிப்பாக சம்மாந்துறை பிரதேச சபை இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை செய்து இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக இதனை பராமரித்தும் வருகின்றது.
இதன் காரணமாக நிந்தவூர் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் எதிர்காலத்தில் விளையாட்டுகளில் திறமையை வெளிக்காட்ட முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசல் காசிம் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்த பெட்மின்டன் உள்ளக அரங்கு உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதையடுத்து இதனை திருத்துவதற்காக மீண்டும் பணம் ஒதுக்கப்பட்டு திருத்திய கட்டிடம் மீண்டுமொரு தடவை கண்ணாடி, கதவுகள், உடைமைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேச சபைகள் பொறுப்பெடுத்து பாதுகாப்பது போன்று இந்த பெட்மின்டன் உள்ளக அரங்கினை நிந்தவூர் பிரதேச சபை பொறுப்பெடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அதனைப் பாதுகாத்து இளைஞர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க முடியாமைக்கான காரணம் என்ன என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெட்மின்டன் உள்ளக அரங்கு தற்போது சேதப்படுத்தியுள்ள நிலையிலான வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -