பீடத்தின் உதவிப் பதிவாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், , பீடத்தின் அரபுமொழித் துறையின் தலைவர் கலாநிதி ஏ.எம் றாசீக் மற்றும்விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய பீடாதிபதிக்கு தமது வாழ்த்துக்களையும் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.
கடந்த 2026.06.03 ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற பீட சபையின் விசேட கூட்டத்தின் போதே கலாநிதி ஜெசீல் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி மற்றும் உயர்கல்வித் துறைகளில் நீண்டகால கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட கல்வியாளரான கலாநிதி ஜெசீல் அவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளதுடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆய்வுப் பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவராகவும் அறியப்படுகிறார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், பீடத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துதல், ஆய்வு மற்றும் வெளியீட்டுச் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், மாணவர் மையப்படுத்தப்பட்ட கற்றல் சூழலை உருவாக்குதல் மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பீடத்தின் அனைத்து கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு தாம் உறுதியுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பணியாளர்கள், கலாநிதி எம்.ஐ.எம். ஜெசீல் அவர்களின் தலைமையின் கீழ் பீடம் புதிய முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டதுடன், அவரின் பதவிக்காலம் கல்வி, ஆய்வு மற்றும் நிர்வாகத் துறைகளில் புதிய சாதனைகளை உருவாக்கும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இறுதியாக, புதிய பீடாதிபதிக்கு அனைத்து பணியாளர்களும் ஒன்றிணைந்து தமது முழுமையான ஆதரவை வழங்க உறுதியளித்தனர்.

0 comments :
Post a Comment