ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதியில் சுகாதார சேவையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கும் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே சுகாதார சேவையினை பெற்றுக்கொடுப்பதற்கும் குடும்ப நல உத்தியோகஸ்த்தர்களுக்கு தமிழ் மக்களிடம் தமிழ் மொழியிலேயே பேசி சேவை பெற்றுக்கொடுப்ப
தற்காக தமிழ் மொழி பயிற்சி நெறி ஒன்று சுகாதார சேவையினால் முன்னெடுக்கபட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியின் நிறைவு விழா நேற்று 09 திகதி கண்டி ஓக்ரே சுறறுலா விடுதியில் கண்டி மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபனர் நிதர்சனி பெரியசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி நெறி இரண்டு கட்டமாக இடம்பெற்றுள்ளது கடந்த மாதம் 22திகதி தொடக்கம் 26 திகதி வரையும் இம்மாதம் 05ம் திகதி முதல் 09 திகதி வரை தொடர் 10 நாட்கள் இடம்பெற்றுள்ளன.
இப்பயிற்சி நெறியில் தமிழ் மொழியில் உரையாடுவது மற்றும் அவர்களின் பிரச்சினைகளை விளங்கி கொள்வது தொடர்பாகவும் ஆரம்ப தமிழ் மொழி பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன் இன நல்லிணக்கமும் இதனூடாக ஏற்படுவதாக இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பயிற்சி நெறிக்கு கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 63 குடும்நல உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக க.சுந்தரலிங்கம்,நலீம் மற்றும் மர்ஜான,வைத்திய நிபுனர் பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு பயிற்றுவித்துள்ளனர்.
இப்பயிற்சி நெறிக்கான அனசரனையினை சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனம் வழங்கியுள்ளன.
ஆங்கில மொழியில் கருத்து தெரிவித்த கண்டி மாவட்ட வைத்திய நிபுனர் நிதர்சனி பெரியசாமி,மற்றும் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் ஆரன் ஹவுகின்சன்,...
இதன் போது பயிற்சி நெறியுPலு; கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் திறமைகளை வெளிபடுத்திய மூன்று பேருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
சேவ் த சில்ரன் பெருந்தோட்டபபகுதி செயல்திட்ட சிரேஸ்ட்ட முகாமையாளர் மொக்டர் ரவி வர்மா அவர்களின் ஊஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு குடும்ப நல உத்தியோகஸத்தர்கள்,பொது சகாதார உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் சுகாதா துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
