NFGGஊடகப் பிரிவு-
கொழும்பு தேசிய கண் வைத்திய சாலையின் ஒத்துழைப்புடன் "அதாலா" பௌன்டேசன் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய இலவச கண் வைத்திய முகாம் 20.10.18 சனிக்கிழமை (நேற்று) மிகவும் சிறப்பாக காத்தான்குடி ஜுமைறா பலசில் இடம்பெற்றது.
இவ்விலவச கண்வைத்திய முகாமில் காத்தான்குடி, மண்முனைப்பற்று, கோரளைப்பற்று அடங்கலாக பல பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 கண் நோயாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் தமிழ் சகோதர சகோதரிகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
இவ்விலவச கண்வைத்திய முகாமில் காத்தான்குடி, மண்முனைப்பற்று, கோரளைப்பற்று அடங்கலாக பல பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 கண் நோயாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் தமிழ் சகோதர சகோதரிகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ILM.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் பணிபுரியும் நான்கு விசேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் உட்பட 25 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். கண் வைத்திய பரிசோதனைக்கான சகல உபகரணங்களும,; பரிசோதனை சாதனங்களும் குறித்த வைத்திய குழுவினராலேயே எடுத்து வரப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
எமது பிரதேசத்தில் அதிகமான கண்நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த போதிலும், போதிய பொருளாதார வசதிகள் இன்மையினாலும,; தலை நகருக்கு சென்று தங்கியிருந்து சிகிச்சைகளை பெறுவதில் உள்ள செலவீனங்களினாலும்; முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் பலரும் சிரமங்களை எதிர் நோக்கியிருந்தனர். இவ்வாறான பல நோயாளர்கள் தங்களுக்கான கண் பரிசோதனைகளையும் ஆரம்ப கட்ட சிகிச்சைகளையும் நேற்றைய தினம் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
இதில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்களுக்கு எதிர்வரும் 4ம் திகதி சத்திர சிகிச்கைளை கொழும்பு தேசிய கண்வைத்திய சாலையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் சில நோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் தொடச்சியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வைத்திய முகாமினை நடாத்தியதன் ஊடாக மிக இளவயது மாணவர்களும் அதிகமான பெண்களும் சிறிய வயதிலேயே பார்வைக்குறைபாடுகளுக்கும் கண்நோய்களுக்கும் ஆட்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் கண் சத்திர சிகிச்சை நிபுணர் திருமதி.மானல் பெஸ்குவெல் தெரிவித்தார்.
அதிகமாகனவர்கள் இளவயதிலெயே சீனி நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றமையும், அதிகரித்த தொலைபேசி, தொலைக்காட்சி பாவனைகளும், உணவு பழக்கவழக்கங்களுமே இதற்கான காரணங்களாகும் எனவும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் இது குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகளை பிரதேசத்தில் விரைவில் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்படி இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஸ்ஹுர் ,பிரச்சார செயலாளர் நஜா முஹம்மட், மாவட்ட அமைப்பாளர் ALM. சபீல் நளீமி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள்,பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட பிரதேச பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.