களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

ஒரு வாரத்துக்குள் வாக்குறுதியை நிறைவேற்றினார் 
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் 

ளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் 60 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி பிரதி அமைச்சர் மேற்படி வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டார்.அந்தக் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உடனடி நிதி உதவியை வழங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகளிடம் வாக்குறுதி வழங்கினார்.அவ்வாறு வாக்குறுதி வழங்கி ஒரு வாரத்துக்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி,ஒதுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபாவில் 50 லட்சம் ரூபா வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நீர் விநியோக மற்றும் புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வைத்தியசாலையின் ஏனைய குறைபாடுகளையும் தீர்த்து வைப்பதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறியுள்ளார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -