தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் 20 வது வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 06 ஆம் திகதி பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாகவம், கௌரவ அதிதிகளாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் பசிலுர் ரஹ்மான் ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஊழியர் சங்கத்தின் செயலாளர் வை.முபாறக் தெரிவித்தார்.
இக் கூட்டமானது இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ளதுடன், பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஊழியர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும், புதிய நிருவாக சபை தெரிவும் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.