புதியவர்களை உள்ளீர்பதில் அமைச்சர் றிசாத் கவனம் செலுத்துவதனால் மு.கா அடையும் தாக்கங்கள் என்ன ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது- 



டகத்துறையில் பல சாதனைகளை செய்வதற்கான திறமைகளும், சந்தர்ப்பங்களும் இருந்தும், அரசியல் கட்சியில் அவசரப்பட்டு பதவியொன்றினை பெற்றுக்கொண்டதன் மூலம் முஷாரப் அவர்கள் ஓர் குறுகிய கட்சி அரசியல் வட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இவர் நடாத்திய அதிர்வு நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களை அழைத்து அது செய்யவில்லை, இது செய்யவில்லை என்றும், கட்சி சமூக அரசியலில் எதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் கேள்விமேல் கேள்வி கேட்டு மு.கா காரர்களை உரித்தெடுத்த முஷாரப் அவர்கள், தான் அமைச்சர் ரிசாத்தின் கட்சியில் இணைந்ததன் மூலம் எதனை அடயப்போகின்றார் ?

ஆரம்பத்தில் இருந்து இவரது ஊடகத்தின் மூலமான அரசியல் நகர்வுகளை வைத்தே இவர் யாரென்று நாங்கள் எதிர்வு கூறியிருந்தோம். அமைச்சர் ரிசாத்தின் அரசியல் எதிரிகளை அதிர்வு நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களை தோலுறித்து அவமானப்படுத்தும் வேலைகளை முழுமையாக செய்து முடிப்பதற்குள் அவரது கட்சி சார்ந்த அரசியல் சாயம் வெளுத்துள்ளது.

பிரபலமானவர்களையும், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களையும், மு.கா பிரமுகர்களையும் இனம் கண்டு அவர்களை வளைத்துப்போட்டு தனது கட்சிக்கு செல்வாக்கு தேடுவதில் அமைச்சர் றிசாத் அவர்கள் இரவுபகலாக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.

இவ்வாறான அமைச்சரின் செயல்பாடானது மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு தாக்கத்தினையும், சவால்களையும் நாளடைவில் ஏற்படுத்தாது என்று கூறமுடியாது.

ஆனாலும் இவ்வாறான சவால்களை முறியடிக்கும்பொருட்டு மு.கா என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது ? மு.கா கட்டமைப்பினை சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் என்ன ? அவ்வாறு ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சியின் அடியுறுதியை வைத்துள்ள பழமைவாதிகள் அனுமதிப்பார்களா ?

அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கு ஊடகவியலாளர் என்பவர் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால் அரசியலில் ஆர்வமுள்ளவர்களையும், துறைசார்ந்த திறமைசாலிகளையும் உள்ளீர்ப்பதில் காட்டுகின்ற தயக்கம்தான் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளை நாளடைவில் அதிகரிக்க செய்கின்றது.

முஸ்லிம் காங்கிரசின் கட்டமைப்பில் செயல்திறன் இல்லாத பலர் பதவிகளை அலங்கரித்துக் கொண்து காலத்தை கடத்துகின்றார்கள். இவ்வாறானவர்களை அகற்றிவிட்டு செயல்திறன் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கும் சூழ்நிலைகள் முஸ்லிம் காங்கிரசில் காணப்படவில்லை. இந்த நிலையிலேயே காலங்கள் ஓடிக்கொண்டு செல்கின்றது.
எனவே, புதியவர்களையும், மக்கள் விரும்புகின்றவர்களையும், துறைசார்ந்த நிபுணர்களையும் அமைச்சர் றிசாத் அவர்கள் தேடித்தேடி பதவிகளை வழங்குகி அவரது கட்சியை பலப்படுத்தி வருகின்ற நிலையில்,

மக்களால் வெறுக்கப் படுகின்றவர்களையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் தொடர்ந்து கட்சியின் பதவிகளில் வைத்துக்கொண்டு அழகு பார்ப்பதானது, எதிர்கால முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி பாதைக்கு பாரிய பின்னடைவினை ஏற்ப்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -