கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்புடன் கல்முனை முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையில்
கல்முனைப் பிராந்தியத்தில் பரவலாக காணப்படும் சிகரட் மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துவது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் மற்றும் ஒன்றிணைந்த செயற்திட்ட அங்குராப்பன நிகழ்வு இன்று 16.08.2018 வியாழக்கிழமை இரவு 08.00 மணியளவில் கல்முனை முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வை கல்முனை ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் வைத்திய கலாநிதியுமான எஸ்.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மேற்படி நிகழ்வில் கல்முனைப் பிராந்தியத்தில் மிக வேகமாக பரவிவரும் போதைப் பொருட்கள் பாவனை மற்றும் சிகரட் பாவனை போன்றவற்றை இல்லாதொழிப்பது தொடர்பில் பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இன் நிகழ்வில் வளவளர்களாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின் மற்றும் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நிலையத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அலுவலர் முகம்மது ரஹீம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பணிமனையின் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராசா கல்முனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பரிசோதகர் முகம்மது வாஹித் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு கல்முனையில் காணப்படும் போதைப் பொருள் பாவனையை தவிர்ப்பதில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு போதைப் பொருள் பயன்பாடுகளின் மூலம் ஏற்படும் நோய்கள் மற்றும் சமூக சீர்கேடுகள், சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு போன்றவற்றை தவிர்ப்பது இவ்வாறு போதைப் பொருள் பாவனையாளர்களின் அண்மைக்கால ஆய்வுகள் மற்றும் தரவுகள் போன்றவை தொடர்பில் விரிவாக தெளிவுபடுத்தினார்கள்.
மேற்படி நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரஹ்மான் மற்றும் வைத்தியர்கள், கல்முனையில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் , பள்ளிவாசல்களின் இமாம்கள், பள்ளிவாசல் நிருவாகத்தின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார பணிமனையின் அலுவலர்கள் , ஊடகவியலாளர்கள் மாணவர்கள் என பல துறைகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக கல்முனை பிராந்தியத்தில் சிகரட் மற்றும் போதைப்பொருள் பாவனையை தவிர்ப்பதற்கு முழுமூச்சாக தொழிற்படும் சமூக மற்றும் சிவில் நிருவாகம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கி அதை திறம்பட செயற்படுத்த ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.