இன்று அம்பாளின் ஆடிப்பூரம்!



டிப்பூரம் அம்மனுக்குரிய நாளாகும். ஆடிப்பூரம் இன்று 28/07/2025 திங்கட்கிழமை ஆகும் .

அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள், அன்றைய நாளில் தான் அம்பாள் பெண்மை அடைந்ததும் , உமா மகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும், இதனால்தான் எல்லாம் அம்மன் ஆலயங்களிலும் சடங்குகள் , சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள் நடக்கின்றன,,

இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை பக்தர்களால் நடத்தப்படுகிறது.
இந்த ஆடிப்பூர தினத்தை வளைகாப்பு நாளாக கருதி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் பண்ணி பெரு விழாவாக கொண்டாடுகிறார்கள், அதற்கு காரணம் மூன்றாம் மாதத்தில் (பங்குனி உத்தரம் ) நிறைய பெண் தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது, அதன் படி திருமணம் ஆகி கருவுற்று ஐந்தாவது மாதம் , ஏழாவது மாதம் , ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடத்துவது வழமை இதன் அடிப்படையில் ஆடி மாதம் அம்பாளுக்குரிய ஐந்தாவது மாதம் என்பதால் வளைகாப்பு மாதமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இன்று 28 ஆம் தேதி திங்கட்கிழமை அம்பாள் ஆலயங்களில் விசேட பூசை அலங்காரங்கள் இடம்பெற உள்ளதால் அன்றைய தினம் அனைவரும் ஆலயம் சென்று இன்னருள் பெறுவோமாக!

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :