இலங்கை உள்ளுர் கலைஞர்களினால் நடித்து தயாரித்து வெளியிடப்பட்ட 40 நிமிட குறுந் திரைப்படம் கடந்த சனிக்கிழமை 26 ஆம் திகதி வத்தளையில் உள்ள ராம் சீனிமாவில் சம்பிரதாய பூர்வாக திரையிடப்பட்டது.
இப் படத்தினை இயக்குனர் பிரவீன் கிருஸ்னராஜ் தயாரித்துள்ளார். இத் திரைப்படம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் கொடுமைகளை பேசும் படமாகாவும் பெண்களை சமுக வலைத்தளங்கள் ஊடாக கவரப்பட்டு அவர்களை அச்சுறுத்தி பாலியலுக்கு உட்படுத்தி கொலைசெய்கின்ற காட்சியும் கொலையுண்ட பெண்னின் பாசமிகு தந்தையும் சகோதரியும் அந்த காம வெறியர்களை பழிவாங்கும் கதையாக அமையப்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க உள்ளுர் கலைஞர்கள் அவர்களது திறமைகளை வெளிக்கொணர சர்ந்தரப்பமளித்துள்ளது.
இப் படத்தினை இயக்குனர் பிரவின் நாடு முழுவதும் காட்சிப்படுத்துவதற்கும் அவர் ஏற்கனவே 4 க்கும் மேற்பட்ட குறுந் திரைப்படம் தயாரித்துள்ளதாகவும் இப் படத்தினை தயாரிக்க தனக்கு ஒர் வருடம் சென்றதாகவும் தெரிவித்தார். நவீன டிஜிட்டல் முறையில் இதனை தயார்படுத்தி சிறந்த இசையமைத்து மொழிபெயரப்பு செய்யப்பட்டுள்ளன. எனவும் தெரிவிததார்

0 comments :
Post a Comment