கடல் மேல் பறக்க வைத்தான்
+++++++++++++++++++
Mohamed Nizous
கடல் மேல் பறக்க வைத்தான் -கணவனை
கட்டாரில் உழைக்க வைத்தான்
சவுதியில் பிழைக்க வைத்தான் - மனைவியை
அவதியில் திளைக்க வைத்தான்
அவதியில் திளைக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
கனவைச் சுமந்தவள் இங்கே...ஏ
அனல் தரும் சூட்டில் அரபியின் நாட்டில்
கணவன் வாடுவான் அங்கே..ஏ
இருந்து வருவான் வருந்திப் போவான்
இளமை வீணாய்க் கழியும்
ஒரு ஆண் பெண்ணின் உறவை நினைத்து
உள்ளம் உள்ளே உடையும்...
கடன் சுமை நடுவே வெளிநாடு போவார்
கடும் பொறுப்பாலும் போவார்
தனியாய் சமைத்து தனியாய் துவைத்து
பனியாய்க் கரையும் ஆசை.
ஸ்கைப்பில் உறவும் இண்டனெட் சிரிப்பும்
எவ்வளவு தூரம் ஆற்றும்
உழைத்து அனுப்பும் ரியாலும் தினாரும்
ஊரார் நினைப்பில் சுலபம்