கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் அவர்கள் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜரானதுடன் வழக்காளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகள் குழுவும் தமது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். இருந்தபோதிலும் மேலதிக வாதங்களையும், சமர்ப்பிப்பு களையும் முன்வைக்க அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :