ஒலுவில் மற்றும் தீகவாபி பிரதேசங்களுக்கு பொது விளையாட்டு மைதானங்களுக்கான காணிகளை ஒதுக்கி வழங்குவது தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் (28) திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் எ.ஆதம்பாவா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையிலான குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்டப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2025 பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், தீகவாபி விளையாட்டு மைதானத்திற்காக 2 ஏக்கர் காணி வன இலாகா திணைக்களத்தால் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்காக 6 ஏக்கர் காணி LRC காணியிலிருந்து அடையாளம் காணப்பட்டு, 2 வாரத்திற்குள் நில அளவை செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிவடைந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து மைதானத்திற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment