இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” கல்முனை கடற்கரையில் மாபெரும் சிரமதானம்



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர பிரதேசங்களில் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் "கிளீன் சிறிலங்கா" திட்டத்தின் ஓர் அங்கமாக "அழகான கடற்கரை" எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின் 18வது விஜயபாகு காலாட்படையணி ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை(29) முற்பகல் 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.

“கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் பிரதேச பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள். இளைஞர் கழகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

18வது விஜயபாகு காலாட்படையணி வழிநடத்தலில் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை பங்களிப்புடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு கல்மனை வடக்கு தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிக்கான தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் 18வது விஜயபாகு காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் அமைப்பினரும் இதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :