அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்திய "பெண்மையைப் போற்றுவோம் - 2025" எனும் தொனிப்பொருளில் மாபெரும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (26) திருகோணமலை மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகர சபையின் முதலாவது மேயரான கௌரவ க.செல்வராசா கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள 23 பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயல் இம்மானுவேல், திருகோணமலை தென்கையிலை ஆதீனம் குருமகா சந்னிதானம் தவத்திரு அடிகளார்,
ஸ்ரீசண்முக இல்ல பொறுப்பாளர் செல்வி விமலா நடராஜா,
திருகோணமலை பிராந்திய கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபாங்கி ஜோன்சன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
"மாதர்குலம் மனுக்குலத்தின் மணிமகுடம்" எனும் தலைப்பில் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி, பிரதிப் பிரதம செயலாளர் நா.மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். அன்பின் பாதை நிறுவுனர் திருமதி றொசில்டா அன்டன் அவர்களினால் பணி தொடர்பான "அவள் ஒரு சகாப்தம்" என்ற காணொளியையும் வெளியிடப்பட்டது.

0 comments :
Post a Comment