புனித கங்கை பிரகடணம் சுற்றுலா தளமாக மாற்றியமைக்கப் படுகிறது.

மு.கா அமைப்பாளர் றியாழ் அவர்களின் ஆலோசனை,வழிகாட்டுதலில் பிரதேச சபை உறுப்பினர் கபூர் நடவடிக்கை!
செம்மண்ணோடை. எம்.வை.எம். பயாஸ்-
ண்மையில் கோறளை பற்று பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பொண்டுகள்சேனை ஆறு புனித கங்கையாக பிரகடணம் செய்யப்பட்டதாக பதாதைகள் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் பேரில் , கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழ் அவர்களினது ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்கள் பொண்டுகள்சேனை ஆற்றை சுற்றுலா பகுதியாக மீண்டும் மாற்ற தவிசாளருடன் பேச்சுவாரத்தை மேற்கொண்டார்.
இதன் பயனாக மேற்குறிப்பிட்ட பொண்டுகள்சேனை ஆற்றை சுற்றுலா தளமாக நடைமுறைப்படுத்த கோறளை பற்று தவிசாளர் சம்மதம் தெரிவித்தார்.
எதிர்வரும் சபை அமர்வில் இதற்கான பிரேரனையையும் சபையில் முன் வைத்து சபை அங்கீகாரத்தையும் பெறவுள்ளதாக ALA கபூர் தெரிவித்தார்.

சுமுகமாக தீர்க்கவேண்டிய இப் பிரச்சினையை சமூக பிரச்சினையாக சித்தரித்து தங்களது அரசியல் இலாபம் ஈட்ட நினைத்து இரு இனங்களுக்கு இடையிலும் பினக்கை ஏற்படுத்தும் வன்னம் அறிக்கையிட்ட மாற்று கட்சி குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர்களையும் இனவாதிகளையும் வன்மையாக கண்டிப்பதாகவும் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்களும், குறிப்பிட்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -