பைசல் காசிமின் முயற்சியால் பொத்துவில் வைத்தியசாலைக்கு இரு வைத்தியர்கள் நியமனம்!!


சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசிமின் முயற்சியின் பலனாக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்திய நிபுணர் [ visiting physician] ஒருவரும் குழந்தை நல வைத்தியர் [pediatrician] ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுள் வருகை தரும் வைத்திய நிபுணர் இன்று அவரது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் பைசல் காசீம் கருத்துக் கூறுகையில்;

எமது ஆட்சியில் சுகாதாரத் துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் காணப்படும் வளக் குறைபாடுகளும் வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தட்டுப்பாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றன.

அந்த வகையில்,பொத்துவில் ஆதார வைத்தியசாலையும் அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றது.அங்கு காணப்பட்ட பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.நவீன வைத்திய உபகாரணங்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.இருக்கின்ற ஏனைய குறைபாடுகளையும் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில்தான் அந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற வைத்திய நிபுணர்களுக்கான தட்டுப்பாடுகளும் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இப்போது வருகை தரும் வைத்திய நிபுணர் [ visiting physician] ஒருவரும் குழந்தை நல வைத்தியர் [pediatrician] ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுள் வருகை தரும் வைத்திய நிபுணர் இன்று அவரது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படுகின்ற ஏனைய குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும்.-என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -