தமிழ் தலைவர்களின் 50:50 கோரிக்கையை முஸ்லிம் தலைவர்கள் ஏற்கமறுத்தது ஏன்..?


கல்முனை எம்.எச்.எம்.இப்றாஹிம்-
ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையில் சிறுபாண்மை இன மக்களின் 50:50 கோரிக்கைக்கு முதலில் ஆதரவளித்த முஸ்லிம்கள் ஏன் பின்னர் எதிர்த்தனர் என்பதற்குறிய காரணத்தை டாக்டர் கலீல் அவர்கள் தன்னுடைய "ஓர் அரசியல்வாதியின் நினைவுகள் " என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றார். 

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50:50 கோரிக்கையில் இலங்கைத் தமிழருக்கு 17 ஆசனங்களும், பரங்கியருக்கும் ஐரோப்பியருக்கும் நியமனமூலம் 8 ஆசனங்களும் ஏனய இன மக்களுக்கு 12 ஆசனங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்ததால், முஸ்லிம்களை வேண்டுமென்றே புறந்தள்ளி விட்டீர்கள். எஞ்சியதிலிருந்துதானா எங்களுக்கு இடம் கொடுக்கப்படவேண்டும் என்று குற்றம்சாட்டிவிட்டு தமிழர்கள் போல் முஸ்லிம்களுக்கும் சம பங்கு தறப்படவேண்டும் என்று கூறி தனது எதிர்ப்பை தெறிவித்திருந்தார். 

முன்பு தமிழ் தலைவர்களின் கொள்கைகளை முஸ்லிம்கள் ஆதரித்தபோதும்கூட இப்படியான செயல்களினால் முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டார்கள் என்ற ஆதங்கம் அன்றய முஸ்லிம் தலைவர்களுக்கு இருந்ததில் சந்தேகமில்லை எனலாம்.
1945ம் ஆண்டு அரசியல் சீர்திருத்த மசோதா விவாதத்தில் பேசிய சேர். ராசீக் பரீட் அவர்கள் இப்படிக்கூறினார்.
நாங்கள் துன்பப்பட்டிருக்கிறோம். எங்களைப்போல் நீங்களும் பாதிக்கப்படவில்லை. 1936 ஆண்டு நடந்த விடயங்களை நினைவு படுத்திப் பாருங்கள். அவ்வாண்டில் நடந்த தேர்தலில் சோனகர்களால் ஒரு பிரதிநிதியைக்கூட அரசசபைக்கு அனுப்பமுடியவில்லை. அந்த நேரத்தில் தமிழர் சமூகம் எங்களுக்கு உதவவில்லை. 40.000 வாக்காளர்களைக் கொண்ட மன்னார், மட்டக்களப்புத் தெற்கு, திருகோணமலை ஆகிய ஒவ்வொரு தொகுதியிலிருந்தும், தமிழர்கள் தமிழ் பிரதிநிதிகளைத்தான் சட்டசபைக்கு அனுப்பினார்கள். இருந்தும் தமிழ் பிரதிநிதிகளை எங்களில் ஒருவராகத்தான் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டி.ஆர்.ஓ. பதவிகளுக்கு ஒரு முஸ்லிமையும் பரிந்துரை செய்ய நீங்கள் முயற்சி செய்யவில்லை. அதன் பிறகு சிவில் அதிகாரியாக நியமனம் பெற்ற 'மொகிதீன்' என்ற சோனகரை யாழ்பாணத்துக்கு நியமித்தபோது, எங்கள் தமிழ் பெண்கள் ஒரு சோனகன் முன்னிலையில் நிற்கமாட்டார்கள் என்று கூறி அவருடைய இடமாற்றத்தை தடை செய்தீர்கள். இது தமிழர்களின் முஸ்லிம் விரோத மனப்பாங்கையே எடுத்துக்காட்டுகிறது என்று சேர். ராசீக் பரீத் எடுத்துக்கூறி இப்படியான மனோ நிலையிலிருக்கும் தமிழ் தலைமைகளோடு எப்படி நாங்கள் பயனிக்கமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

இதைப்போன்றே 1956 ஆம் ஆண்டு அரசமொழி மசோதா விவாதத்தின் போது சேர் ராசீக்பரீத் அவர்களைப்பார்த்து அன்றய வவுனியா தொகுதி அங்கத்தவரான சுந்தரலிங்கம் அவர்கள் " உம்மை ஒரு மௌலா என்றழைக்கிறோம்" என்று மிக ஏளனமாக கூறினார். அதற்கு சேர் ராசீக் பரீத் அவர்கள் "என்னை நீங்கள் நூறு பட்டப்பெயர் கொண்டு அழைக்கலாம் " என்று கூறியபோது, மீண்டும் "ஒன்று போதும் சிங்கள மௌலா" என்று சுந்தரலிங்கம் ஏளனமாக அவருடைய முகத்துக்கு நேரே அவருடைய மனது புண்படும்படி பேசினார். . அதற்கு ராசீக் பரீத் அவர்கள் எம்மிடையே சில கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், இருந்தாலும் எந்தவொரு முஸ்லிமும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மதம் மாற்றப்பட்ட தமிழர் என்றழைப்பதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டு, இதே கைங்கரியத்தைத்தான் 1885 ஆம் ஆண்டும் சேர்.பொன். இராமநாதன் அன்ற சட்டசபையில் கூறி தோற்றுப்போனர் என்று கூறியபோது, மீண்டும் சுந்தரலிங்கம் குறுக்கிட்டு 'தோற்றுப்போனாரா' என்று ஏளனமாக கூறிவிட்டு " உம்முடைய பாட்டனாருக்கு கூட இது விளங்கட்டும் என்று மனது புண்படும்படி பேசினார்.
மேலும் சேர். ராசீக் பரீத் அவர்கள் தன்னுடைய உரையில் சேர் பொன் ராமநாதன் ' இலங்கை சோனகர் தமிழ் மொழி பேசுகின்றவர்களாதலால் அவர்களைத் தமிழர்கள் என்று நாம் கணிக்கலாம் என்று கூறியது போன்றே நீங்களுகளும் இப்போது கூறுகின்றீர்கள் என்றபோது சுந்தரலிங்கம் உம்முடைய பாட்டனாரும் ஒரு தமிழரா என்று ஏளனமாக கேட்டார். 

இப்படியான செயல்களின் மூலம் முஸ்லிம்களயும் முஸ்லிம் தலைவர்களையும் அவர்கள் கணக்கில் எடுக்காமல் செயல்பட்டவிதம் யாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

இப்படி முஸ்லிம்களை தமிழர்கள் தாழ்த்தி நடத்தியமையாலேயே 50:50 கோரிக்கையை ஆதரித்த முஸ்லிம்கள் அவர்களை விட்டுவிட்டு சிங்கள மக்களை ஆதரிக்கதுவங்கினர். மாக்கான் மாக்காரும், சேர் ராசீக்பரீதும் , டாக்டர் கலீலும் அரச சபையிலும், பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகளிலிருந்தே நாம் இவ் உண்மைகளை அறிந்துகொள்ளமுடியும். 

அதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய சேர் ராசீக்பரீத் அவர்கள் தெளிவாக ஒரு விடயத்தை எடுத்துக்கூறினார். "தமிழர்களின் கீழ் எவ்வளவோ துன்பம் அனுபவித்திருக்கிறோம். எமக்கு யாரும் தலைவராக இருக்கத்தேவையில்லை. அப்படி ஒரு தலைவர் தேவையென்றால் நாங்கள் சிங்களத் தலைவர்களையே தேர்ந்தெடுப்போம்.எமக்கு ஒரு தலைவர் போதும் இரண்டு தலைவர்கள் தேவையில்லை . நாம் தமிழர்களின் கீழ் ஊழியம் செய்து பட்ட அவஸ்த்தை போதும்" என்று முஸ்லிம்களின் ஆதங்கத்தையும், மனவேதனையையும் கூறி எதிர்கால முஸ்லிம்களும் ஒரு செய்தியை கூறிவிட்டு சென்றுள்ளார்.

தமிழர்களுடைய கொள்கையை வெற்றியடைவதற்காக முஸ்லம்களும் தமிழ்பேசும் மக்கள் என்பதனால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று அரவணைத்துக்கொண்டாலும், முஸ்லிம்கள் முஸ்லிம் என்ற காரணத்தால் தாக்கப்படும்போதும் அல்லது உரிமை மறுக்கப்படும்போது இந்த தமிழ் தலைமைகள் என்னவென்றும் கவணிப்பதில்லை. முஸ்லிம்கள் தமிழ் பேசும் சமூகமாக இருந்தாலும் கலை கலாச்சாரங்களில் மட்டுமல்ல மார்க்கவிடயங்களிலும் அவர்கள் தனித்துவமானவர்கள் என்பதை இன்றும் தமிழர்கள் உணராதவர்கள்போன்றே நடந்து கொள்கின்றார்கள். ஆற்றைக் கடக்கும்வரை அப்பா அப்பா என்பவர்கள் ஆற்றைக் கடந்ததன் பின் சித்தப்பா என்பதுபோலவே நடந்து கொள்வதை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதே உண்மையாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -