எம்.ஜே.எம்.முஜாஹித்-
கிழக்கு மாகாண சபையின் குறித்தொகுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தையல், தகவல் தொழிநுட்பம், அழகுக்கலை பாட பயிற்சி நெறியினை திறன்பட முடித்துக்கொண்ட சுமார் 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களினால் ஆக்கப்பட்ட பொருட்கள் செயன்முறை காட்சிப்படுத்தப்பட்டு பிரதம அதிதியினால் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் - நிருவாகம் திரு. வை.ஜெயச்சந்திரன், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் -அபிவிருத்தி திரு.வி.குணாளன், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர்-திட்டமிடல் ரீ.ராஜசேகர், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் -முகாமைத்துவம் செல்வி.என்.வரணியா, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் திரு.பி.ஹான்ஸ்டன், கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்விமான்கள், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.