ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திகபத்திரண, யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன்டொபி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 டொபிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவும் மாணவர்களை இலக்குவைத்தே முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரது இந்தக்கூற்று தொடர்பில் கருத்துவெளியிட்ட ஸ்ரீலங்கா கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -