ஜுனைட்.எம்.பஹ்த்-
தற்போது பேசப்பட்டுவரும் HPV தடுப்பூசி தொடர்பில் சிலர் தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களை தவறாக வழிநடாத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் வெளியாகிய தகவல்கள் தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸ்ருத்தீன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெறிவித்தார்.
இது பாரிய செலவுகளை மேற்கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோய்த்தடுப்பு ஊசிகளில் ஒன்றாகும்.
HPV தடுப்பூசிகள் தொடர்பிலே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
HPV தடுப்பூசி என்பது பெண்களுக்கான கற்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி இது தரம் 06 கல்விகற்க்கும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இது மிகவும் விலை உயர்ந்த தடுப்பூசி ஆகும்.
இத் தடுப்பூசி மிகவும் பிரயோசமானது இத்தடுப்பூசி தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தன்மை இல்லை இத் தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.
இத் தடுப்பூசி தற்போது அறிமுகப்படுத்தும் காரணத்தினால் அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பெற்றோருக்கு இது தொடர்பில் கடிதம் வழங்கப்படுகிறது..
இது தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை இல்லை இதுப்தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேளுங்கள் என வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸ்ருத்தீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது..