” இஸ்லாம் இரண்டு பெருநாட்களை மனித வாழ்விற்கு மிகவும் அவசியமான இரண்டு பெறுமானங்களின் அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளது. இதில் இறைதூதர் இப்றாஹிம் (அலை) அவர்களின் வாழ்வியல் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் 'ஈதுல் அழ்ஹா' எனும் திருநாளை தியாகத்தின் அடிப்படையில் இஸ்லாம் அமைத்துள்ளது. இது இஸ்லாமிய திருநாள்களில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும் இப்புனித நாளுக்காக எனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் அகம் மகிழ்கின்றேன் ”” என மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தனது வாழ்த்துச்செய்தியில்
உலக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு விசேட பிராத்தனைகள் மூலம் அவர்களுக்கான பாதுகாப்பினை இப் புனித நாளில் நாம் அனைவரும் வல்ல இறைவனின் இரு கரம் ஏந்தி பிராத்திக்க வேண்டும். உலக முஸ்லிம்கள் தற்போது நெருக்கடியான சூழல்நிலைக்குள் தள்ளப்பட்டு வாழ்ந்த்து அவருக்கு எதிராக நாளுக்கு நாள் அநீதிகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக மியன்மார், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அந்நாட்டின் படையணிகளாலும், பெளத்த கொடுபிடிகளால் இடம்பெற்று வரும் சித்திரவாதைகள் காரணமாக நாளுக்கு நாள் மரணங்கள் சம்பவவித்தே வருகின்றது இவ்வாறான நிலையில் அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.நா தனது நிலைப்பாட்டை தெரிவித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நாட்டு மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க இலங்கையர்களாகிய நாம் இப்புனிதமான ஹஜ்ஜூப் பெருநாளில் அதிகமான தூஆக்களை வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திக்க வேண்டும்.
அதுபோல், ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் இவ்வாறன கொடுபிடிகள் அதிகரித்து காணப்படுவதால் அவர்களுக்குமான நல்ல வாழ்வை இறைவன் வழங்க எம் பிராத்தினைகளில் நாளுக்கு நாள் சேர்க்க வேண்டும் எனவும் இலங்கையில் அனைத்து இன மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் நிலை நாட்டி ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
