அப்துல்சலாம் யாசீம்-
கன்தளாய்-சூரியபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சமகிபுர வயல் பகுதியில் புதையல் தோண்டிய எட்டு பேருடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் சனிக்கிழமை (29)
கைப்பற்றியுள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சூரியபுர-சமகிபுர பகுதியைச்சேர்ந்த ஏழு பேரும் ஹபரண பகுதியைச்சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் தப்பியோடியதாகவும் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கன்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.