சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைதொடர்பில், அண்மையில் பல உண்மைகள் வெளியாகின. தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
இருப்பினும்,இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால்,துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாகவே லசந்த உயிரிழந்தார் என மரணம்இடம்பெற்ற போது பிரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனவே,லசந்த கொலையை திசை திருப்பிய வைத்திய அதிகாரி சுனில் குமார கைதுசெய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.