க.கிஷாந்தன்-
இன்று ஆட்சி மாற்றம் காரணமாக பல்வேறு நபர்கள் அடிக்கல் நாட்டினாலும் அந்த அபிவிருத்தி யாவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டு வந்த அபிவிருத்தி தான்.
இந்திய இரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசி தான் 4000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு இன்று எனையவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள் எனவே மலையகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இலங்கை காங்கிரஸ்ஸினால் கொண்டுவரப்பட்டது.
ஆகவே கடந்த காலங்களில் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து செயப்பட்டதன் மூலம் தான் எங்களுக்கு பாரிய அபிவிருத்தியினை மேற்கொள்ள முடிந்தது எனவே சகலவற்றினையும் தீர்மானிப்பது உங்கள் சத்தி ஆகவே நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களுக்கு தேவையான அத்தனையும் பெற முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் 26.03.2017 அன்று நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ், முன்னாள் கல்வி அமைச்சர் அனுசா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் .