எங்களது நிலமை மிகவும் மோசமாக உள்ளது இதனை நிவர்த்தி செய்ய அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நம்பி வேலையில்லை. இளைஞர்கலாள் மட்டுமே முடியும். தயவுசெய்து இளைஞர்களை ஒன்றுகூட்டுவோம் எமது மன்னை பாதுகாப்போம், உங்களது சுயலாபங்களுக்கா இளைஞர்களை பிழவு படுத்தாதீர்கள். அவார்களை இளைஞர்களாக வேலைசெய்யவிடுங்கள். ஒரு கிரீஸ் மனிதன் பிரச்சினையில் கூடிய எமது இளைஞர்கள் எங்கே ??
ஆலுமை மிக்க இளைஞர்கள் எங்களையும் வழிநடாத்துங்கள். கிண்ணியாவை டெங்கில் இருந்து மீட்டெடுப்போம். சுனாமியில் , கிரிஸ் மேன் பிரச்சினையில் இருந்த அதே கிண்ணியன் என்ற மன நிலையுடன் ஒன்றினைவோம்.
10உயிர்களை இழந்துள்ளோம் இனிமேலும் தயார் இல்லை.
ஆகவே அனைத்து இளைஞர்களும் ஒரிடத்தில் ஒன்றினைவோம் நமக்காக நாமாவோம். இன்று மாலை 4.00 மணியளவில் நாம் ஒன்றுகூடுவோம் இன்ஷா அல்லாஹ் சிறுவர் பூங்கா வளாகத்தில் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் யாரும் தலைவர்கள் இல்லை.
இதை நான் சொல்வது நான்தான் பெரியவன் என்று காட்டுவதற்கல்ல துடுப்பு இருந்தால்தான் படகு நகரும் என்பதற்காகவே சொல்கின்றேன்.
அரசியல் வேண்டாம், பிரதேச வாதம் வேண்டாம், பணக்காரன் ஏழை என்ற வேறுபாடு வேண்டாம், படித்தவர் படிக்காதவர் என்ற குறுகிய சிந்தனை வேண்டாம், எம் மக்களின் சுக வாழ்வுக்காக ஒன்றுபடுவோம்.
இனியாவது எமது வைத்தியர்களின் தனியார் மருத்துவ மனைகளை மூடிட்டு கிண்ணியா பொதுவைத்தியசாலையில் கடமைபுரிவார்கலா..???
வைத்தியர்களே எம் உயிர்களையும் மதியுங்கள். பணம் இல்லாமையினாலேயே நாம் இன்னும் பொது வைத்தியசாலையில் உயிருக்காய் போராடுகின்றோம்.. புறப்படுவோம் வாருங்கள் எம் கிண்ணியாவை மீட்டெடுப்போம் டெங்கு எனும் ஆபத்தில் இருந்து.
நண்பன் சயித்,
கிண்ணியா.