ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
தான் எங்கோ படித்து பட்டம் பெற்று வந்தவன் என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலி 127 வாக்குகளாலே கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்திருந்தார். அந்த 127 வாக்குகளாள் பிரதி அமைச்சர் அமீர் அலி வெற்றியடைவதற்கு நான் காரணம் என முன்னாள் ஓட்டமாவடி பிரதேச முன்னாள் சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட் கல்குடா பிரதேசத்தில் உள்ள பிரதி அமைச்சர் என்று பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக பிரதி அமைச்சர் அமீர் அலியினை விமர்சித்து இன்று 11.03.2017 மீராவோடையில் கிழக்கு முதலமைச்சர் கலந்து கொண்ட நிகவில் உரையாற்றும் பொழுதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டினை கல்குடாவில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நன்கொடை திட்டங்களை உத்தியோகபூர்வமாக மக்களீடம் கையளிக்கும் நிகழ்வு கல்குடாவில் உள்ள பல இடங்களில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் தொடர் உரையாற்றிய கேபி.எஸ்.ஹமீட்.. வருகின்ற மாகாண சபை தேர்தலில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களை வெற்றியடை செய்வோம். அதே போன்று கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக இருக்கின்ற றியாலினுடைய மேற்பார்வையின் கீழே எமது அரசியல் நடவடிக்கைகளை வருகின்ற மாகாண சபை தேர்தலில் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அரசியலில் ஈடுபடுகின்ரவர்கள் நல்ல மணிதர்களாக இருக்க வேண்டும், மனிதர்களை மதிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். பிரச்சனை சம்பந்தமாக அரசியல்வாதியிடன் ஒருவர் செல்கின்ற பொழுது அரசியல்வாதி பாய்ந்து விழுகின்றவாரக செயற்படுவதனை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களை அரவணைத்து பிரச்சனைகளை உள்வாங்கி தீர்வினை பெற்று கொடுக்க கூடியவர்களாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் தெரிவித்தார்.
குறித்த முதலமைச்சருடைய மீராவோடை நிகழ்வில் இடம்பெற்ற விடயங்களின் சுருக்கமான காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.