நாசா அறிவிக்கப் போகும் நாளைய செய்தி - உலகமே எதிர்பார்ப்பில் மூழ்கியிருக்கிறது

எஸ்.ஹமீத்-
மிக முக்கியமான செய்தியொன்றை நாளை இந்த உலகத்துக்குச் சொல்லப் போவதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அது என்ன முக்கியமான செய்தி என்பதை அறிந்து கொள்வதில் உலகமே பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறது.

நாளை இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், நாசாவின் விண்வெளி ஆய்வுத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட செய்தியாளர் மகா நாட்டில் நாசாவின் பிரபலமான விஞ்ஞானிகள் அந்தப் புதிய செய்தியை வெளியிடுவார்கள். முன் அனுமதி பெற்ற செய்தியாளர்கள் மட்டுமே இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியுமென்று நாசா அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி என்னவாக இருக்குமென்பது பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல்களாக இது இருக்கலாமென்று சிலர் கருதுகின்றனர். 'இல்லை...பூமியைத் தாக்கியழிக்கப் போகும் பிரமாண்டமான விண்கல் பற்றிய அச்சமூட்டும் செய்தியாக இது இருக்கக் கூடும்.' என்று வேறு சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். 'ஒரு புதிய, மனிதர்களைப் போன்றோர் வசிக்கின்ற கோள் ஒன்றை நாசா கண்டு பிடித்திருக்கிறது. அதனைப் பற்றிய அறிவிப்பே நாளை வெளியாகவுள்ளது.' என்றும் சிலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மகாநாட்டில் நாசா அறிவிக்கப்போகும் புதிய கண்டுபிடிப்புகள் அதன் 'தி ஜர்னல் நேச்சர்' என்னும் இதழிலும் வெளியாகவுள்ளது. அத்தோடு இம் மகாநாடு நாசா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவும் உள்ளது.

நாளை விரும்பியோர் பின்வரும் இணையத்தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். http://www.nasa.gov/nasatv என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -