வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அங்கு வாழும் இரு சமூகங்களையும் சேர்த்து மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான நல்லாட்சியில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் (ஜனோபர்), முல்லைத்தீவு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களிடையே நீண்ட காலமாக காணப்பட்டு வரும் நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாகவும் இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவர் வழங்கியுள்ள நேர்காணலின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.
கேள்வி: உங்களது அரசியல் பிரவேசம் பற்றி சுருக்கமாகக் கூறுவீர்களா?
பதில்: கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து 1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் , வாழ்வாதரம் உள்ளிட்ட விடயங்களை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்;.
நான் அமைச்சரின் இணைப்பாளராக இருந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன். பல இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.
கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்களின் வாக்குகளே என்னை மாகாண சபைக்கு அனுப்பி வைத்தது.நான் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்பாளராக இருந்து செய்த பணிகளும், பின்னர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் முன்னெடுக்கின்ற பணிகளிலும் ஒருபோதும் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பார்ப்பது கிடையாது. எனது மாவட்டம், எனது மக்கள் என்ற ஒரே நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாக அபிவிருத்திப்பணிகளைச் செய்து வருகிறேன்.
ஏன்னுடைய பணிகளுக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களைத் தருகிறார்கள் காத்திரமான ஆலோசனைகளையும் கூறிவருகிறார்கள்.
கேள்வி: வடபுல முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?
பதில்: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இறுதிவரை அவை நிறைவேறற்ப்படவில்லை. ஏமாற்றத்தையே கொடுத்தது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்களோடும் எமது அமைச்சர் ரிசாத் பதியுதீன் பல அழுத்தங்களைக் கொடுத்து பேசியிருக்கிறார். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது வடக்கு முஸ்லிம்களை அவர்களின் சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதாக வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதிகள் வெறும் வாய்ச் சொல்லுடன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
அதுபோல வடமாகாண சபையிலும் கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் நானும், தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண சபையின் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெயநாதனும் இணைந்து பிரேரணையொன்றை சமர்ப்பித்தோம். முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்தோம். எனினும் இன்று வரைக்கும் மாகாண சபையும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கடந்த அரசாங்கத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு சமூகங்களையும் ஒன்றினைத்து , ஒற்றுமைப்படுத்தப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாம் முழுமையாக நம்pபிக்கை வைத்திருக்கிறோம். இந்த வருடத்திற்குள் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் எமது வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இதுதொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் நான் பல தடவைகள் பேசியிருக்கிறேன். முல்லைத்தீவு முஸ்லிம்கள் மாத்திரமின்றி, 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேசியிருப்பதாகவும் இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது வடபுல முஸ்லிம் சமூகத்திற்கு அரசு நல்ல பதிலைக் கொடுக்கும் எனவும் அமைச்சர் கூறியிருக்pறார்.
ஆத்துடன், அமைச்சர் ரிசாத் பதியுதீன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
எனவே, அவ்வாறு வெளிமாவட்டதைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை அமைச்சர் ரிசாத் முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்திருப்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்வேன் என அறிக்கை விடுபவர்களுக்கு சவால் விடுக்கிறேன்.
கேள்வி: முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மிக நீண்ட பிரச்சினையாகவே இருக்கிறது. இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
புதில்: உண்மையில், சுமார் மூன்று சதாப்தங்களுக்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் விடுதலைப்புலிகளயினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்கள் சமாதானம் ஏற்பட்டதன் பின்னர் தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் என ஆசைப்பட்டார்கள். எனினும் அவர்கள் அனைவரும் தமது பூர்வீகத்தில் வாழும் நிலை காணப்படவில்லை.
காரணம் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற போது இருந்த குடும்பங்களையும் பார்க்க தற்போது இரண்டு, மூன்று மடங்குகளாக அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே, எல்லோரும் அங்கு சென்று வாழமுடியாத நிலை உள்ளது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறவுள்ளதால் அங்கு காணி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இருக்கிறது.
எனவேதான் சமாதானத்தின் பின்னரான காலப்பகுதியில் காணியற்ற முல்லைத்தீவு முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான அரச காணியை சட்டரீதியாக காணிக்கச்சேரி நடத்தி அதன்மூலம் வழங்குவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னெடுத்தார். அதற்காக முள்ளியவளையில் பொருத்தமான அரச காணியும் இணங்காணப்பட்டது.
எனவே, குறித்த காணியை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் துப்பரவு செய்து அங்கு குடியெற்றங்களை செய்ய முற்படும் போது முல்லைத்திவிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இது திட்டமிட்ட குடியேற்றம் மற்றும் அமைச்சர் ரிசாத் தனது அரசியல் இலாபத்திற்காக இதனை செய்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக குறித்த இத்திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
அதன் பின்னர் கூழாமுறிப்பு பிரதேசத்தில் காணி கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக காணியும் அடையாளம் காணப்பட்டு காணிக்கச்சேரியும் நடத்தப்பட்டது. அதனையும் குறித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை செய்தனர்.
இந்த காணிப்பிரச்சினையில் இராணுவனும் தலையிட்டது. இராணுவ புலனாய்வு பரிவினர்களை அனுப்பி காணி பற்றி ஆராய்ந்தனர். முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கூட இராணுவத்தினரின் யே நாடியிருந்தார்.
அப்போதைய அரச அதிபர் கூழாமுறிப்பு பிரதேசத்தில் 250 குடும்பங்களுக்கு காணியை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். எனினும் அதுவும் கொடுக்கவில்லை. முல்லைத்தீவில் வாழும் முஸ்லிமகள் 88 வீதமானவர்களுக்கு காணியில்லை. இதனை காணிக்கச்சேரிகள் மூலம் நிரூபித்துள்ளனர். தமிழ் மக்கள் 8வீதமானவர்களுக்கும், சிங்கள மக்கள் 3வீதமானவர்களுக்கும் காணியில்லை. எனினும் தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை 50 வீதம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை ஒரு வீதம் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை.
ஆத்துடன், முள்ளியவளையில் முஸ்லிம்களுக்கு காணி வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்த போது அதனை வழங்கக் கூடாது என தடுத்து நிறுத்தி விட்டு இன்று அதே இடத்தில் தமிழ் மக்களுக்கு காணிகளையும், வீடுகளையும் வழங்கியள்ளார்.
எனவே இதில் என்ன நியாயம் இருக்கிறது என நான் கேட்க விரும்புகிறேன். ஏன் முஸ்லிம் மக்களை மாத்திரம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறீர்கள் என்று மிகவும் வேதனையுடன் கேட்க விரும்புகிறேன்.
முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு காணிகள், வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நானும் உடன்பட்டவனாகவே இருக்கிறேன். இதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்டவர்களுடன் பேசியிருக்கிறேன்.
முல்லைத்தீவில் வாழும் காணியற்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை, வீடுகளை வழங்கி இரண்டு சமூகங்களும் ஒற்றுமையான வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். நாங்கள் ஒருபோதும் பிரித்துப் பார்த்தது கிடையாது.
எனவே, முல்லைத்திவு முஸ்லிம்களுக்கு காணிகளை, வீடுகளை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் முல்லைத்தீவு தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளோ இரண்டு சமூகங்களுக்கும் மத்தியில் பிளவுகள ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கேள்வி: முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் காடுகளை அழித்து சட்டவிரோதமாகக் குடியேறுகிறார்கள் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகிறார்களே?
புதில்: இதனை நான் முற்றாக மறுக்கிறேன். அவர்கள் முல்லைத்தீவை வசிப்பிடமாகக் கொண்டிருந்தாலும் வரலாறுகள், தமிழ் முஸ்லிம் மக்களின் நீண்ட கால நல்லுறவு பற்றிய தெளிவின்மை காரணமாகவே அவ்வாறு உணண்மைக்குப் புறப்பான அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.
உண்மையில், 1970, 1976 மற்றும் 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் முறிப்பு, வன்னியன்மேடு, கொத்தியாகும்பம், ஆகிய பகுதிகளில் அப்போதைய அரசாங்கத்தினால் முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான போமிட்களும் மக்களிடம் இருக்கின்றன.
முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளதுடன், ஜூம்ஆப்பள்ளிவாசலும் இருந்துள்ளன. அவைவ க்பு சபையிலும் பதிவு செய்யப்பட்டுள்து. ஆத்துடன், அந்த மக்கள் வரி கட்டியமைக்கான ரசீதுகளையும் வைத்திருக்கிறர்கள்.
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் காணி பராமறிப்பின்றி, பெருங்காடாக மாறியிருக்கிறது.
சமாதானம் ஏற்பட்டதன் பின்னர் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மீள்குடியேறிய போது காடுகளாக காட்சியளிக்கும் முறிப்பு மேட்டுநிலக் காணிகளை தனவந்தர்களின் உதவியைப் பெற்று துப்பரவு செய்து குடியிருப்பதற்கான முயற்சிகளிம் ஈடுபட்டு வருகிறார்கள்.
முறிப்பில் நிரந்தரமாக தங்கியிருந்து காணிகளை துப்பரவு செய்வதற்கு அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தே முஸ்லிம்கள் குறித்த வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு முஸ்லிம்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வரும்போதுதான் ஒருசில கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முறிப்பில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள் என ஊடகங்களில் அறிக்கை விட்டுவருகிறார்கள். இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவிடமும், வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பேசியிருக்கிறேன்.
ஊண்மையில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து குடீயேறி வருகிறார்கNh என்று எண்ணியிருந்தாலும் பின்னர் அந்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து பார்த்ததில் அவர்கள் தமது சொந்த காணியை துப்பரவு செய்கிறார்கள், அதற்குரிய ஆவணங்கள் இருப்பத அவதானித்து உண்மைகளை புரிந்துகொண்டுள்ளோம் என கூட்டமைபபு வன்னி பாராளுமனற உறுப்பினர்கள் எண்ணிடம் கூறினார்கள்.
இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் வாக்குறுதியளித்திருக்கிறார். அத்துடன் இந்த சம்பவம் பற்றி வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளேன்.
கேள்வி: முல்லைத்தீல் வாழும் இரு சமூகங்களையும் சார்ந்த மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
புதில்: இந்த நாட்டில் வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக நல்லுரவோடு வாழ்ந்த முல்லைத்தீவு தமிழ் முஸ்லிம் மக்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும். இன்று அதிகமான தமிழ் இளைஞர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள். நாங்கள் விட்டுக்கொடுப்புடன் வாழ்ந்து வருகிறோம்.
வேலைவாய்ப்புகள், அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்களில் பாகுபாடின்றி செயற்படுகிறோம்.இதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஏற்றுக் கொணடுள்ளதுடன், கடந்த பொதுத் தேர்தலிலும் எமது கட்சி சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த விஜிந்தனுக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் கூடுதலான விருப்பு வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே, தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக செயற்படுவது முல்லைத்தீவில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பெரும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அவர்கள் சந்தோஷமாக வாழும் இரு சமூகத்தையும் ஏதோ ஒரு முரண்பாடுகளை ஏற்படுத்தி பிரிக்கப் பார்க்கிறார்கள். ஆகவே, மக்கள் இவர்கள் விடயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். எதிர்காலங்களில் அவர்களின் உண்மையான முகத்தை காணுவார்கள். நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
சந்திப்பு: ரஸீன் ரஸ்மின் (நன்றி- தினகரன்)
