கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய சித்திரப் பாட ஆசிரியரின் தேசிய மட்டச் சாதனை



லக சமுத்திர தினம் – 2026 ஐ முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய தேசிய மட்ட சித்திரம் வரைதல் மற்றும் புகைப்படக்கலைப் போட்டிகளில், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் சித்திரப் பாட ஆசிரியரான கலைஞர் ஏ.ஓ. அனல் (விநாயகமூர்த்தி ஜீவராசா) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள Water’s Edge Ballroom மண்டபத்தில் ஜூன் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற முதலாவது சர்வதேச கடல்சார் சூழல் பாதுகாப்பு மாநாடு மற்றும் சித்திர, புகைப்படக் கண்காட்சி நிகழ்வின் போது, அவருக்கு சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 24 வெற்றியாளர்களில் ஒரே தமிழராகத் திகழ்ந்த இவர், கிழக்கு மாகாணத்திற்கும், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி வரும் கலைஞர் ஏ.ஓ. அனல், 2024 ஆம் ஆண்டு தேசிய மட்ட சித்திரப் போட்டியில் முதலாமிடத்தையும், 2025 ஆம் ஆண்டு திறமைச் சான்றிதழையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது தொடர் சாதனையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்மாநாட்டில் சுற்றாடல் அமைச்சர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பீடாதிபதிகள், University of Sri Jayewardenepura பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி, கல்வி மற்றும் கலைத்துறைகளில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் உயரிய பங்களிப்பை மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :