மைத்திரியின் முதுகில் தட்டி விட்டுத்தான் போனார் தவிர ஒரு ரூபா காசி தந்தாரா? - உதய கம்மன்பில

அமெரிக்காவின் இரண்டாவது தலைவரான ஜோன் கெர்ரி இலங்கைக்கு வந்து ஜனாதிபதியின் முதுகில் தட்டி சிறந்த நல்லாட்சி என்று கூறிவிட்டு சென்றாரே தவிர ஐந்து சதமேனும் கடனுதவி வழங்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அதேபோல் இந்தியப் பிரதமர் வந்து இலங்கைப் பிரதமரைக் கட்டிப்பிடித்தாரே தவிர அவரும் எந்தவித கடனுதவிகளையும் வழங்கவில்லை. 

தேவையென்றால் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார் என்று உதய கம்மன்பில தெரிவித்தார். 

அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் சீனா போன்ற பணக்கார நாடுகளுடன் நட்புறவை பேணி வந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் உலகின் மிகப்பெரிய கடனாளிகளான அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நட்புறவு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -