புதிய சட்டம்: மஸ்ஜித்துக்களில் அதான் மற்றும் முக்கிய அறிவித்தல்களுக்கு மட்டுமே ஒலிபெருக்கி

நியமிக்கப்பட்டுள்ள புதிய வக்பு சபை நிர்வாகம் மஸ்ஜித்துக்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதில் புதிய கட்டுபாடுகளை அறிமுகப்படுத்த தீர்மானித்ததுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் படி

மஸ்ஜித்துக்களில் அஸான் மற்றும் முக்கிய அறிவித்தல்களுக்கு மட்டுமே ஒலிபெருக்கியை வெளியில் கேட்கக் கூடிய வகையில் பயன்படுத்த வேண்டும் ஏனைய தேவைகளுக்கு பொலிசாரின் அனுமதியைப் பெற்றே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என வக்பு சபை தீர்மானிதுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் மௌலவி பஸ்லுல் ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் எம்மிடம் கருத்துரைத்த சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த அறிவிப்பின் மூலம் சாதக மற்றும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது சாதகம் என்று பார்க்கும்போது ஒலிபெருக்கியை வெளியில் கேட்கவேண்டும் என்பதற்காக தேவையற்ற முறையில் அதி கூடிய ஒலியை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்துவது ஓரளவு கட்டுபடுத்தப் படும் , அதேவேளை பாதகம் என வரும்போது நாட்டில் சில இடங்களில் இன,மதவாதிகளின் சொல்லைக்கேட்டு பொலிசார் செயல்படும் சூழல் இருப்பதால் குறித்த இடங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கான அனுமதியை நிரந்தரமாக பெறமுடியாது போகும் அதன் காரணமாக படிப்படியாக அங்கு ஒலிபெருக்கியை அஸானுக்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவித்தனர் .

மேலும் அவர்கள் அஸான் அறிவிக்கப்படும்போது கூட குறித்த அளவு ஒலி அலைக்கு மேலாக அலறல் சத்தத்தை வெளிபடுத்தும் வகையில் ஒலிபரப்பப்படுவதை கட்டுப்பத்தும் விதிகளையும் அறிவிக்க வேண்டும் அஸான் கேட்பவருக்கு இனிமையாக இருக்க வேண்டும் எரிச்சலையும் , சிரிப்பையும் , கோபத்தையும் ஏற்படுத்தும் முகமாக இருக்காது பார்த்துக்கொள்ள வேண்டும் இது தொடர்பிலும் கவனம் செலுத்தப் படல் வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :