புங்குடுதீவு மாணவியின் படுகொலை: சந்தேக நபர்கள் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவியின் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர்களை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இவ் உத்தரவரை நீதவான் விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதவான், சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு கின்றீர்களா ? என கேட்ட போது, தம்மை பலரும் குற்றவாளியாக பார்கின்றனர் இதனால் எமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மதிப்பிழந்து உள்ளனர் என சந்தேக நபர்களில் ஒருவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த நீதவான் இந்த வழக்கில் குற்றவாளிகள் இனம் காணப்படும் வரையில் நீங்கள் சந்தேக நபர்களே. இந்த வழக்கு பாரிய குற்ற செயல் என்பதாலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் வழக்கு விசாரணைகள் தாமதமாகின்றது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -