கராத்தே வீரர் கொலை: இராணுவ வீரர்கள் உட்பட 6 பேரிடம் விசாரணை...!

ராத்தே சண்டை கலை வீரரான இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட 6 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிதா மாவத்தை பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11.45 அளவில் சென்ற முகத்தை மூடிய நபர்களை கொண்ட குழுவினர், அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்சா என்பவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கராத்தே சண்டை கலை வீரரான இவர் தொலைக்காட்சி ரியலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நபராகும்.

கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய இரத்தம் படிந்த நான்கு தடிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த நபர்கள் தஹய்யாகம, மஸ்மடுவ, விஜயபுர மற்றும் பாலன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதற்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -