மீள் குடியேற்றப்பட்ட அகத்தி முறிப்பில் குமாசா வீடமைப்புத் திட்ட மாதரிக் கிராமம் திறப்பு..!

இக்பால் அலி-

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 ஆம் ஆண்டு நிறை தின நிகழ்வில் குவைட் நாட்டு  அரச அனுசரணையுடன் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் குமாசா வீடமைப்புத் திட்ட மாதரிக் கிராமம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை 30-10-2015 நடைபெறவுள்ளது.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தன்னார்வத் தொண்டுப் பணிகளின் தொடர் வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல், அல்குர்ஆன் மத்ரஸா, 20 வீடுகள், நீர் விநியோகம் உள்ளடங்கிய  வீடமைப்பு திட்ட மாதரிக் கிராமம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் 

(மதனி) பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி அம்ஜத் ராசிக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ, எல். பிர்முஹம்மது குத்பாபேரையையும் அஷ்ஷெய்க் என் எம். சீ. அன்சார் ரியாதி வரவேற்புரையையும் மற்றும் நன்றியுரையை கலாபூசணம் அஷ்ஷெய்க் செய்னுதீன் எஸ் பரீத் உரை நிகழ்த்தவுள்ளனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -