அடை மழை காரணமாக தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது..!

ந.குகதர்சன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசங்களை அண்மித்த கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினரினால் இரு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -