கல்வி தொடர்பாக தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் இது -ஹக்கீம்

 எம்.எம்.எம். ரம்ஸீன்-

கண்டி நகர முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த கண்டி நகர சிவில் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வரும் இவ்வமைப்புக்கள் கண்டியில் கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் கல்லூரியின் முன்னேற்றத்திற்குப் பக்கபலமாக நின்று செயற்படவும் ஏனைய பாடசாலைகளான அல்ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம் , தென்னகும்புரை அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலயம், சித்திலெப்பை மகா வித்தியாலயம் என்பவற்றைக் கட்டியெழுப்பவும் உறுதிபூண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
  
இந்த அமைப்புக்களின் வரிசையில் சித்திலெப்பை கல்வி அபிவிருத்தி அமைப்பு என்ற அமைப்பு கண்டி நகரில் சகல அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையில் சகல துறைகளிலும் பணியாற்றுபவர்களினதும் பங்களிப்புடன் செயற்பட முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.  

இந்;த அமைப்புக்கள் மேற்படி நோக்கத்தின் அடிப்படையில் சில முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். கண்டியில் சித்திலெப்பை மகா வித்தியாலயத்தைத் தரமான பாடசாலையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இதேவேளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டி நகர முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக சில கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றார். 

இந்த அடிப்படையில் கடந்த 25  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தில் அமைச்சர் சித்திலெப்பை கல்வி அபிவிருத்தி அமைப்பு உட்பட பிரதிநிதிகளுடன் அமைச்சர் கண்டி முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக புத்திஜீவிகள் உட்பட மத்திய மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கண்டி முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை  அமைச்சரினதும் அதிகாரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். 

இங்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், 

கண்டி நகர முஸ்லிம் மாணவர்களில் எதிர்கால கல்வி நிலை தொடர்பாக தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது. 

கண்டி நகர முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க வேண்டிய தேவை கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றது. இப்பாடசாலைகளில் மாணவர்கள் கல்வித் துறையில் உரிய அடைவுகளை எட்டும் போது பௌதீக வளத்தேவைகளையும் படிப்படியாக அடைந்து கொள்ள முடியும்.  

கண்டி நகரில் முஸ்லிம் பாடசாலைகள் பல்வேறு காரணங்களால் பின்தங்கிய நிலையிலுள்ளன. இதற்கான காரணங்களை சரியாக இனங்கண்டு பாடசாலைகளில் நிலவும்; குறைபாடுகளை நிறைவு செய்வதன் மூலம் கண்டி நகர முஸ்லிம் மாணவர்களும் தரமான  கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். 

கண்டி நகரில் பழமைவாய்ந்த சித்திலெப்பை மகா வித்தியாலயத்தை கட்டியெழுப்புவதற்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  பாடசாலை மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பெற்றோர் மத்தியில் பாடசாலை மீது நம்பிக்கையும் அபிமானமும் ஏற்படும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகும்.  

நாட்டில் நகர்ப்புற பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுவதில்லை. ஆனால் நகர்ப்புற முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏனைய பாடசாலைகளில் முரண்படும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் கைங்கரியத்தைக் கல்விப் பணிமனைகள் செய்வதுண்டு. இதனால் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் பெரும் நிர்வாக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய  நிலை ஏற்படுவதுண்டு. இத்தகைய நிலை ஏற்படாமலிருப்பதை கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். 

சித்திலெப்பை பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்காக மாணவர் எண்ணிக்கையை பூச்சியமாக்கி மீள மாணவர்களை அனுமதிக்கும் பணியை மேற்கொள்ளவும் முடியாது. இதற்குப் பெற்றேர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வது இலகுவானதல்ல. இப்பாடசாலையில் கட்டிட வசதி உட்பட ஏனைய பௌதீக வளங்களும் மனித வளங்களும் காணப்படும் நிலையில் இந்நடவடிக்கை சாத்தியமற்றதாக அமையும்.  

கண்டி நகரில் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலையை பதியுந்தீன் மகளிர் பாடசாலையுடனும் கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரியுடனும் இணைப்பது பற்றி கண்டி முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அல்ஹம்ரா பாடசாலை மாணவிகளை பதியுந்தீன் மஹ்மூந் பாடசாலையுடனும் மாணவர்களை கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் பாடசாலையுடனும் இணைப்பதன் மூலம் அல்ஹம்ரா பாடசாலையை ஆரம்ப பரிவு பாடசாலையாக அபிவிருத்தி செய்ய முடியும்.  கண்டி நகர முஸ்லிம் மாணவர்களில் எதிர்கால கல்வி நிலை தொடர்பாக தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது.  

கண்டியில் சிங்களமொழிமூலம் கல்வி பயிலும் முஸ்pலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் சிங்கள பாடசாலைகளில் முன்பு போல் அனுமதி பெற முடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர். இதனால் எமது முஸ்லிம் பாடசாலைகளை கட்டியnழுப்ப வேண்டிய தேவை பெற்றோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.  

கண்டி நகரில் இயங்கி வரும் கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் பாடசாலை , அல்-ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம் , சித்திலெப்பை முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பன தொடர்பாக ஆய்வென்றை முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள்; செய்வதன் மூலம் இப்பாடசாலைகளில் காணப்படும் பலம் , பலவீனம், அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்களையும் தெளிவாக இனங்காண முடியும். இது கண்டி நகர முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி ஆக்கபூர்;வமான செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

புதிய அரசாங்கம்  கல்வித் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளவுள்ளது. புதிய அரசாங்கம் கல்வித்துறையில்  மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இம்மாற்றம் கடந்த அரசாங்கம் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை மீள் பரிசீலனைக்குட்படுத்தியதாக அமையும். 

கடந்த அரசாங்கம் கல்வித்துறையில் முன்வைத்த சில யோசனைகள் முழமையாக அமுலாகவில்லை. இத்தகைய யோசனைகள் பற்றியும் அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அத்துடன்  புதிய மாற்றங்கள் நாட்டுக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்;துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்தை பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் மட்டும் அடைந்துவிட முடியாது. பாடசாலைகளில் பௌதீக அபிவிருத்திக்கு மேலதிகமாக மாணவர்கள் ,  பெற்றோர்களைக் கல்வியின் மீது நாட்டம் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்காகப் பல்வேறுபட்ட  ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் கிரமமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். 



 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -