அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச – தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன் , மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு ஒன்றரை கோடி, ஒரு கோடி ரூபா மத்திய தரத்தினர்களுக்கு நிர்மாணித்து விற்பனை செய்யும் சுகபோக வீடுகளை ஹோமாகமவில் கொரேதெடுவவில் நிர்மாணித்து 5, 10 இலட்சம் ரூபாவுக்கு வழங்கியுள்ளார்.
இதனால் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள ஓசியன் வியு நிறுவணத்திற்கு 80 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் தினைக்களத்தின் நிதி மோசடிப் பிரிவுக்கும் இந் நிறுவனத்தின் அதிகாரிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என அமைச்சின் கீழ் உள்ள ஓசியன் நிறுவனத்தின் தலைவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதனை விடவும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 1 இலட்சம் கலன்டர்களும் டயறிகளும் அச்சடிக்கப்பட்டு அதற்கான நிதி 60இலட்சம் ரூபா நுகேகொட இமாசா அச்சகத்திற்கு வழங்கக்பட்டுள்ளது. 65 பேர் உள்ள இந்த நிறுவனத்திற்கு 1 இலட்சம கலண்டர்களும் டயறிகளும் ஏன் தேவை?
அவைகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவரது கட்சி ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிகக்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சீ நியுஸ் மற்றும் அமைச்சரின் பேஸ்புக் இயக்குவதற்காக கட்சி அலுவலகங்களில் கடமையாற்றவும் 10 ஊழியர்கள் இந் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த 5 வருட காலத்தில் 60 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்பொழுது கடமையில் இல்லை.
வீடமைப்பு சமுர்த்தி அமைச்சில் நேற்று அமைச்சின் கீழ் உள்ள பம்பலப்பிட்டி ஓசியன் டவர் மற்றும் ஓசியன் வியு நிறுவனத்தின் தலைவர் சந்தன சில்வா மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலண்சுரிய இக் கம்பணியின் நடைபெற்ற நிதி மோசடி சம்பந்தமான அமைச்சினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி தினேஸ் வித்தானபத்திரனவும் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தகவல்களைத் தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தகவல் தருகையில் ;
ஓசியன் வியு நிறுவனம் காலம் சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் அருகில ; ஓசியன் டவர் என்ற உயர் கட்டிடத்தை நிறுவி இதன் ஊடாக தனியார் வீடுகளை நிர்மாணித்து இதன் மூலம் வரும் வருமானத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக மாவட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் ஒரு நிறுவனமாக உருவாக்கினார்.
இந் நிறுவனத்தினால் பாக் றோட் வீடமைப்புத் திட்டம். கண்டி பல்லேகல சுகபோக தனி வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வீடுகளை நிர்மாணிக்கும் போது பத்து வீதம் செலுத்துதல் வேண்டும் 2 வருடத்திற்குள் முழுத் தொகையும் செலுத்திய பின்னரே வீடுகள் குடிபோவதற்கு வழங்கப்படும். அதற்காக விண்ணப்பம் பெறப்பட்டு அதனை டென்டர் ஊடாகவும் பணிப்பாளர் சபை ஊடகாவும் தீர்மாணிக்கபட்டே இவ்வீடுகள் வழங்கப்படுவது முறையாகும். ஆனால் அமைச்சரின் கையெழுத்திட்டு இந்த வீட்டினை வழங்கும்படியே உத்தரவிட்டுள்ளார்.
இந் நிறுவனத்தில் முன்னாள் அமைசச்ரின் கட்சி ஆதரவாளரே தலைவராக இருந்துள்ளார். இங்கு முறைகேடான நிர்வாகம் நடைபெற்றுள்ளது. அதற்கு மேலாக ஒரு வீட்டினை முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்சவின் வேண்டுதலுக்கு இணங்க அவரின் புகைப்படப்பிடிப்பாளருக்கும் இவ்வாறு 1 கோடி ருபா பெருமதியான வீட்டினை 5 இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். எனவும் தெரிவித்தனர்.ரி