அலி ஷரியதியின் சிந்தனைகள் — சமூக மாற்றத்திற்கான வழிகாட்டும் திசைகள். தென்கிழக்குப் பல்கலையில் சொற்பொழிவு!




தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீட சமூகவியல் துறையின் ஏற்பாட்டில், “Ali Shariati’s Sociological Contributions and Their Relevance to Modern Societies”( ‘அலி ஷரியதியின் சமூகவியல் பங்களிப்புகள் மற்றும் நவீன சமூகங்களுக்கு அவற்றின் பொருத்தப்பாடு’) என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதி பல்கலைக்கழக கேட்போர் அரங்கில் (Arts Theatre) நடைபெற்றது.

இந்நிகழ்வு கலாநிதி எம். றிஸ்வானின் முன்நிலையிலும், சமூகவியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஐயூபின் நெறியாள்கையிலும் முன்னெடுக்கப்பட்டது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பதில் பீடாதிபதியும் அரசியல் அறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான உரையை சமூகவியல் துறையின் பேராசிரியர் கலாநிதி அபூபக்கர் றமீஸ் வழங்கினார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கலாநிதி எம். அப்துல் ஜப்பார், இவ்வாறான சொற்பொழிவுகள் மாணவர்களின் கல்விப் பயணத்தில் தேடல்களை அதிகரிக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை கடந்தகாலங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருவதாகவும் ஏனைய துறைகளும் இவ்வாறான மேலதிக கல்விச் செயற்ப்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அலி ஷரியதியின் சிந்தனைகள்;

ஈரானிய சமூக சிந்தனையாளர் அலி ஷரியதி (1933–1977) மதத்தை சமூக மாற்றத்தின் கருவியாகக் கண்டவர். வர்க்கப் பிரச்சினைகள், அரசியல் அடக்குமுறை மற்றும் கல்வியின் சமூக மாற்றத்தில் பங்கு ஆகியவற்றைப் பற்றிய அவரது சிந்தனைகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.

அவரது பிரபலமான கூற்று:

“Religion is not to send man to heaven, but to bring justice on earth.”

(“மதம் மனிதனை சொர்க்கத்துக்கு அனுப்புவதற்காக அல்ல; பூமியில் நீதி நிலைநிறுத்துவதற்காகவே.”)

சொற்பொழிவின் முக்கிய அம்சங்கள்


பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தனது உரையில்,

• மதத்தை சமூக விமர்சனத்தின் கருவியாகக் காணும் ஷரியதியின் பார்வை,

• வர்க்க அநீதி மற்றும் சமூக மாற்றத்திற்கான அவரது அணுகுமுறை,

• கல்வியின் மூலம் இளைஞர்களின் பங்குபற்றல்,

என பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிட்டார்:

“Knowledge must never remain within books; it must walk into the streets, inspire the youth, and transform society.”

இலங்கைச் சூழலில் பொருத்தம்


உரையில், ஷரியதியின் சிந்தனைகள் இலங்கையின் பன்முக சமூகத்திலும் பொருந்தக்கூடியவை என விளக்கப்பட்டது.

• இன–மத பன்முகத்தன்மையில் ஒற்றுமை,

• இளைஞர்களின் சமூக செயற்பாடு,

• கிராம–நகர இடைவெளி மற்றும் சமூக நீதி கேள்விகள்,

என்பன இதில் வலியுறுத்தப்பட்டன.

மாணவர்களின் பங்களிப்பு

சொற்பொழிவின் போது மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

• “இன்றைய அரசியலில் மதத்தின் பங்கு எவ்வளவு?”

• “மதமும் ஜனநாயகமும் இணைந்து இயங்க முடியுமா?”

இதற்கு பதிலளித்த பேராசிரியர் றமீஸ்,

“மதம் தனிநபரை மட்டுமே மாற்றாது; அது சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும். ஆனால் அது அதிகாரத்துடன் இணையும்போது அடக்குமுறையாக மாறும் அபாயம் உண்டு.” என்று கூறினார்.

சொற்பொழிவில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும், ஷரியதியின் சிந்தனைகள் இன்றைய உலக சமூகங்களுக்கும் இலங்கைச் சூழலுக்கும் சமத்துவம், நீதி மற்றும் சமூக மாற்றம் குறித்த புதிய பாதையை வெளிப்படுத்துவதாகக் கருதினர்.

இந்நிகழ்வு, மாணவர்கள் விமர்சன சிந்தனையுடன் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :