இது பற்றி அக்கட்சி தெரிவித்திருப்பதாவது,
1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் மக்கா சென்று திரும்பிய முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர்.
இந்த அநியாயத்துக்கெதிராகவும் அப்புதைகுழி தோண்டப்பட்டு நீதி கிடைக்க முஸ்லிம்களின் பெரு வாக்குகளைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இத்தனைக்கும் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தும் கையாலாகாத அமைச்சராக இருந்தார். யுத்த காலத்தில் அந்த இடத்துக்கு சென்று பார்வையிட ரவூப் ஹக்கீம் படப்பட்டிருந்தாலும் யுத்தம் முடிந்து நீதி அமைச்சராக இருக்கும் போதாவது போய் பார்வையிட்டிருக்கலாம்.
அதே போல் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டோரில் காத்தான்குடி மக்களே 99 வீதம் இருந்தும் அவ்வூர் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரான ஹிஸ்புல்லாவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார அரசாங்கத்தில் இதனை தோண்டுவதற்கு எந்த அழுத்தமும் இன்றி நீதி மன்றம் அனுமதித்துள்ளது.
இந்த இடம் தோண்டப்பட்டு இஸ்லாமிய சமய முறைப்படி மீண்டும் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்துக்கு முஸ்லிம்கள் வந்து பிரார்த்திக்கும் இடமாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.

0 comments :
Post a Comment