முஸ்லிம் உலகின் பிரிவினால்; இஸ்ரேலை எதிர்த்து ஒன்றுபட முடியாது – முபாறக் முப்தி கருத்து!



முஸ்லிம் உலகில் சுன்னா, ஷீயா, தவ்ஹீத், சூபி போன்ற பிரிவுகளுக்கிடையேயான மோதல்கள் நீடிக்கும் வரை, அரபு நாடுகளால் இஸ்ரேலை எதிர்த்து ஒருமித்த போராட்டத்தை நடத்த முடியாது என்று ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மையில் சிரியாவில் சில ஷீயா பிரிவினர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை நாடியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் அங்கு நுழைந்த சம்பவம் அதற்குச் சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில், ஷீயா ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் பெரும்பாலும் சுன்னா ஆதிக்கம் கொண்ட அரச ராணுவத்துக்கிடையேயான பிளவு காரணமாக ஹிஸ்புல்லா பலவீனமடைந்தது என்றும் அவர் கூறினார்.

யமனில் ஹூதி ஷீயாக்கள் மற்றும் சவூதி சுன்னிகள் இடையேயான தீராத பகையும், ஒருவரை ஒருவர் அழிக்க எதிர்பார்க்கும் மனநிலையும், முஸ்லிம் உலகின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. “சவூதி மீது இஸ்ரேல் தாக்கினால் அதனால் நாம் லாபம் அடையலாம் என ஷீயாக்கள் நினைக்கின்றனர்; ஹூதிகள் அழிக்கப்படின் நாம் சாந்தமாக இருக்கலாம் என சவூதிகள் கருதுகின்றனர்” என முபாறக் முப்தி சுட்டிக்காட்டினார்.

மேலும், “சவூதி அரசு எப்போது வீழ்ச்சி அடையும்? மக்கா, மதீனாவை எப்போது கைப்பற்றலாம்?” என்பது ஈரானின் திட்டமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், இலங்கையிலும் பிரிவினைகள் தீவிரமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். “அரசாங்கம் தவ்ஹீத் அமைப்புகளை ஒழித்துவிட வேண்டும் என்பதே சூபிகள் எதிர்பார்ப்பு. இதன் விளைவாகவே 2019 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் தாமே முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தனர். அதேபோல், சூபிகள் எப்போது அழிவார்கள் என்பதே தவ்ஹீதுவாதிகளின் எண்ணம்” என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் உலகம் இந்த நிலையை நீக்காமல், அரபு நாடுகள் இஸ்ரேலை தாக்கினால், இறுதியில் முஸ்லிம்களே இஸ்ரேலிடமும்  அமெரிக்காவிடமும் அணுகி உம்ரா, ஹஜ் விசாக்களை வேண்டிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

– ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :